அல்லாஹ்வை நினைவு கூறுவோம்.

உலக படைப்பினங்களில் உயர்ந்த படைப்பாம் மனித இனம் மற்றும் ஆறாவது அறிவும் உள்ள இனம் அதுவே. அதற்கு நம்மை படைத்த அந்த இறைவனை நாள்தோறும் நினைவு கூறுவோம். எவ்வாறு என்றால் தொழுகையாலும், திக்ருகளாலும், இன்னுமின்னும் நல்ல காரியங்களால் அவனை நினைவு கூர்ந்தால். அவன் நமக்கு இவ்வுலகிலும் , மறுமையிலும் (இறப்பிற்கு பிறகும்) வெற்றியைத்தருவான்.

நாம் தினமும் அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ, இன்னும் பலதேவைகளுக்கோ வெளியில் பயணிக்கிறோம். அந்த நேரத்தை பயனுள்ளதாய் திக்ருகளால் (அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துதல், நினைவுகூறுதல்) மனதுக்குள் சொல்லிக்கொண்டும் பயனிக்களாம். போகும்பொழுதும், வரும் பொழுதும் நன்மையாக கழிக்கலாம்.

இன்னும் ,சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமனத்திற்கு முன்னரும் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்துகொண்டுமிருப்பீராக (50:39 அல் குர் ஆன்)

மேலும் நமது தூதரான கண்ணியமுள்ள மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் மீதும் ஸலவாத்தையும் சொல்வோமாக. அதுவும் நன்மைகளை அதிகரிக்கவும், மறுமையிலும் உதவும்.

நிச்சியமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து (அருள், பிரார்த்தனை)ச் செய்கிறார்கள், ஆகவே, விசுவாசிகளே ! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்; ஸலாமும் கூறுங்கள். (33:56 அல் குர் ஆன்)

மற்றும் நாம் செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்பையும் இத்துடன் செய்யலாம்.

இதுபோன்று நாள்தோறும் செய்தால் நன்மைகள் கூடி, பாவங்கள் குறையும், வீணானதாக நாம் பயனிக்கும் பயணம் அமையாது. உண்மையில் உள்ளம் அமைதி பெறும்... அல்லாஹ் நம் அனைவரும் இந்த அமல்கள் செய்ய உதவிபுரிவானாக! ஆமின்.


2 comments:

ஆயிஷா அபுல். Aug 3, 2011 12:41:00 PM  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

ரமலான் வாழ்த்துக்கள்

அதிரை அபூபக்கர் Aug 3, 2011 12:44:00 PM  

வ அலைக்குமுஸ்ஸலாம், உங்களுக்கும் ரமலான் கரீம்....


நன்றி - சகோதரி ஜலீலா

தொடர்பவர்கள்

என்னைப்பற்றி

My Photo
இறைவன் உதவியால் , எனக்கு அறிந்ததை அறியாதவர்களிடமும் சொல்ல முயல்பவன், எனக்கு அறியாததை அறிந்தவர்களிடமும் தெரிந்த கொள்ள ஆசைப்படுபவன்... நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அதிரையில்.....(Thanjavur District-TamilNadu-S.India)

Blog Archive

கருத்துக்கள்


Free shoutbox @ ShoutMix

வந்தவர்கள்

தேதி அட்டவணை

வந்தவர்களின் வழி