தொழுகையப்பேணித் தொழுவோம்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.



வணக்கங்களின் எல்லாரும் செய்யக்கூடிய ஒன்று, முக்கியாமான கடமை, மற்றும் மறுமையில் முதலில் விசாரிக்கப்படக்கூடிய ஒன்றுதான் தொழுகை.


இதன் மூலம் இறைவனை நெருங்கலாம். உதவி பெறலாம். எவருடைய தொழுகை உள்ளச்சத்துடன் இருக்கிறதோ அதனால் மானக்கேடான மற்றும் வெருக்கத்தகுந்த செயல்களைத்தடுக்கும்..

தொழுகை மூலம் நம்மை படைத்த வல்ல இறைவனை நினைவு கூறலாம். ஒவ்வொருவரும் நமது முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறோமா? என்று நம்மை நாம் பரிசோதித்துக்கொள்வோம். அதனை தவறாமல் நிறைவேற்ற உறுதியுடன் இருக்க வேண்டும். இதற்கு ஷைத்தான் பல வழிகளில் மற்றும் பல வகையான இடையூருகளையும்/ வேலைகள்/ சோம்பேறித்தனம் இது போன்று மிகைப்படுத்தி நமது தொழுகைகளுக்கு இடையூருகளாக மாற்றுவான்.


ஆனால் இந்த சமயத்தில் நமது உள்ளத்தில் வரவேண்டிய விசயம் எப்படியாவது நமது தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.. அடுத்து மரணத்தை நினைவில் வரவேண்டும். ஏனெனில் எல்லா உயிர்களுமே மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்.

இறந்த பிறகு மறுமையில் முதல் விசாரிப்பு தொழுகையைப்பற்றித்தான்.. நாம் ஒவ்வொருவரும் இந்த கணத்தில் சிந்தித்து / சுய பரிசோதனை செய்து பார்க்கவும். இந்த நேரத்தில் நாம் எவ்வளவு நன்மைகள் செய்து இருக்கிறோம். எவ்வளவு தீமைகள் செய்து இருக்கிறோம். இன்று நமது அமல்களின் திராசு எடை ப்போட்டால் எது கூடும் எது குறையும் என்று நம்மில் பரிசோதனை செய்துப்பார்ப்போம்.


அல்லாஹ் கூறுகிறான்: மேலும் தொழுகையைக்கொண்டும், பொறுமையக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் , இன்னும், நிச்சயாமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்கு பெரும் பாரமாகவே இருக்கும் (அல்குர் ஆன்: 2-45)

நாம் நம் மீது கடைமையாக்கப்பட்ட நேரம் குறிப்பிடப்பட்ட ஐந்து வேளைத்தொழுகைகளையும் உங்களுக்கும் எனக்கும் தொழுக அல்லாஹ் அனைவரும் மீதும் அருளும் உதவியும் புரிவானாக. ஆமின்

மற்றும் முக்கியாமாக உங்களது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தொழுகையைப்பற்றி நினைவுப்படுத்தி அனைவரும் தொழவைப்போமாக !
நாம் எந்தந்த விசயத்திற்க்காக நாட்கணக்கில் / மணிக்கணக்கில் நேரிலோ / தொலைப்பேசிலோ பேசுகிறோம்.. ஆனால் அல்லாஹ்வைப்பற்றியோ , இஸ்லாமிய மார்க்கத்தை ப்பற்றியோ பேசிகிறோமா.....?...


7 comments:

நட்புடன் ஜமால் Apr 18, 2010 4:12:00 PM  

நாம் எந்தந்த விசயத்திற்க்காக நாட்கணக்கில் / மணிக்கணக்கில் நேரிலோ / தொலைப்பேசிலோ பேசுகிறோம்.. ஆனால் அல்லாஹ்வைப்பற்றியோ , இஸ்லாமிய மார்க்கத்தை ப்பற்றியோ பேசிகிறோமா.....?...]]


தெளிவா சொன்னீங்க ...

SUFFIX Apr 18, 2010 5:36:00 PM  

நினைவூட்டியதற்கு நன்றி அபூ!!

Anonymous Apr 19, 2010 8:46:00 AM  

assalamu alaikum.
alhamdulillah. u said superbly about prayer.
may allah give u best regards.

அதிரை அபூபக்கர் Apr 19, 2010 2:20:00 PM  

வாங்க ஜமால் அண்ணே.. வந்தமைக்கு வாசித்தமைக்கு,, அல்ஹம்துலில்லாஹ்.. மற்றும் நாமும் தொழுவோம் பிறரையும் தொழ செய்வோம்..

அதிரை அபூபக்கர் Apr 19, 2010 2:22:00 PM  

அல்ஹம்துலில்லாஹ்.. சபீக் அண்ணே.. அல்லாஹ்வின் அருள் கிடைக்க துஆ செய்வோம்.

அஹமது இர்ஷாத் Apr 19, 2010 3:01:00 PM  

//தொழுகையைப்பற்றி நினைவுப்படுத்தி அனைவரும் தொழவைப்போமாக !///

நிச்சயமாக.

ஆழமான சிந்தனை...

அதிரை அபூபக்கர் Apr 20, 2010 11:52:00 AM  

நன்றி சகோதரர் இர்ஷாத் ... இன்சா அல்லாஹ் நாமும் தொழுவோம் பிறரையும் தொழும்படிஏவுவோம்.


நன்றி - சகோதரி ஜலீலா

தொடர்பவர்கள்

என்னைப்பற்றி

My Photo
இறைவன் உதவியால் , எனக்கு அறிந்ததை அறியாதவர்களிடமும் சொல்ல முயல்பவன், எனக்கு அறியாததை அறிந்தவர்களிடமும் தெரிந்த கொள்ள ஆசைப்படுபவன்... நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அதிரையில்.....(Thanjavur District-TamilNadu-S.India)

Blog Archive

கருத்துக்கள்


Free shoutbox @ ShoutMix

வந்தவர்கள்

தேதி அட்டவணை

வந்தவர்களின் வழி